கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று நிட்டம்புவைக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் அப்பிரதேசத்தில் இன்று மாலை திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் மூன்றாம் நாளான இன்று நிட்டம்புவை நகரை பாதயாத்திரை அண்மித்துள்ளது.
இவர்கள் நகரை அண்மித்த மாலை நேரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாதயாத்திரையில் ஈடுபட்டவர்கள் தங்கள் தங்குமிடத்தை சென்றடைவதில் சற்று சிரமம் ஏற்பட்டதுடன், முன்னைய திட்டடத்தின் பிரகாரம் நிட்டம்புவையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் முடியாமல் போயுள்ளது.
எனினும் தற்காலிக மாற்று ஏற்பாடுகளுடன் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் தலையிட்டு குறித்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று தடைவிதித்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த அதிர்ச்சி வைத்தியம் காரணமாக கூட்டு எதிர்க்கட்சியினர் ஆடிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment