July 15, 2016

கொத்தணி குண்டு விவகாரம் பொன்சேகா புதுதகவல்!

விடுதலை புலிகளுக்கு எதிராக யுத்ததின் போது கொத்தணி குண்டு பிரயோகம் செய்யவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இருக்கவில்லை. அதுமாத்திரமின்றி கொத்தணி குண்டு போன்ற பாரதூரமான ஆயுதங்கள் எம்மிடம் இருக்கவும் இல்லை.


விமான படை பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்ததில்லை. கொத்தணி குண்டு பிரயோகத்தாக கூறுவது மாயையாகும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன் போர் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க கூடாது. அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை. மாறாக உள்ளக விசாரணையின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவழைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்ட பிராந்திய அமைச்சிற்கான கட்டடத்தை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார். இதன்பின்னர் தனது கடமைகளை அமைச்சர் பொறுபேற்றார். இந்நிகழ்விற்கு அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்பிற்பாடு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment