July 18, 2016

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர்உணவுப் பொருட்கள், துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு!

புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு நேற்று (17.07.2016) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலர்உணவுப்பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்க, 56300 ரூபா நிதி அனுசரனையினை வழங்கியுள்ளார்.


 
முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்து குடும்பங்களுக்கு தலா 2000 பெறுமதியான 20000ரூபா பெறுமதியில் உடையார்கட்டு தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது போன்று வள்ளுவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியின் விண்ணப்பத்துக்கு அமைய கழுவிப்பூட்டிய 16300ரூபா பெறுமதியில் ஒர் புதிய துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment