July 18, 2016

லசந்த கொலை குறித்த சந்தேக நபரை விடுவிக்க கோதபாய முயற்சித்தாரா?

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான சந்தேக நபரை விடுதலை செய்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ முயற்சித்தார் என இணைய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.



பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் உதலாகமவை விடுதலை செய்ய கோதபாய ராஜபக்ஸ முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.


ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய கொலை செய்த கும்பலுக்கு இந்த இராணுவ சார்ஜன்டே தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இவ்வாறான விசாரணைகளில் தாமோ ஜனாதிபதியோ தலையீடு செய்யப் போவதில்லை என பிரதமர் பதிலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment