July 29, 2016

அகதிகள் கொள்கையில் மாற்றம் இல்லை! ஏங்கெலா மெர்கல் அறிவிப்பு!

அகதிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார்.


ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜேர்மனியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்புப்பட்டிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர் இஸ்லாமிய அரசு என கூறிக்கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இருவருக்கும் ஆதரவு வழங்கிய நாட்டை கேலி செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜேர்மனியின் பாதுகாப்பை உறுதி செய்ய தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜேர்மனியின் வெளிப்படையான கலாச்சாரத்தினை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment