July 16, 2016

யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த இரண்டாவது நாடு இலங்கை!

யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடு இலங்கை என உலக சுகாதார அமைப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்புடன் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த இரண்டாவது நாடாக இலங்கை இருக்கும்.

2020 ஆம் ஆண்டுக்குள் தனது உறுப்பு நாடுகளில் யானைக்கால் நோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பு செயற்படுத்தி வரும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாகியுள்ளது.

இதனடிப்படையில் உலக சுகாதார அமைச்சின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடு என்பதற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாகவும் மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment