July 9, 2016

யாழில் ஊடுருவும் போதைப் பொருள் கடத்தல் காரர்கள் யார்? ; பதிலளிக்க முடியாமல் திணறிய பொலிஸ்மா அதிபர்!

யாழ். மாவட்டத்திற்கு பெரும் தொகையாக ஊடுருவும் போதைப் பொருட்ள் கடத்தல் காரர்கள் யார்? இவ்வாறானவர்களின் பிண்ணியில் இருப்பவர்கள் யார் என்று கேட்கப்பட்ட கோள்விக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் மழுப்பினார்  யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண.


யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நேற்று காலை யாழ்.மாவட்டச் செலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது என்பது போல் வெளியுலகத்திற்கு காட்டும் வகையில் பெருமளவிலான கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக மீட்கப்படுகின்றது.

இவை தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளிவருகின்றன. இருப்பினும் இவ்வாறான போதைப் பொருட்களை கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் பின்னணிகள் அறிந்து அவர்களும் கைது செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாகவில்லை.

தனியே போதைப் பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது என்றுதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஏன் இவ்வாறு தொகையான போதைப் பொருட்களை கடத்திவருவபவர்களை பொலிஸாரினால் பிடிக்க முடியாமல் உள்ளது? என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்:- போதைப் பொருட்களை யாழ்.மாவட்டத்திற்குள் கடத்தி வருபவர்களை இனங்காண கஸ்ரமாக உள்ளது. அவர்கள் கடினமான முறைகளை பயன்படுத்துகின்றார்கள்.

இதனால் போதைப் பொருட்களை கைப்பற்றும் பொலிஸார் கடத்தல் காரர்களை பிடிப்பது கஸ்ரமாக உள்ளது.

இருப்பினும் கடந்த காலங்களில் பெரும்தொகையான போதைப் பொருட்களை நாங்கள் மீட்டுள்ளூம். அண்மையில் விசேட அதிரடிப்படையினர் 95 கிலோக்கிராம் கஞ்சாவினன மீட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதே போன்று பொலிஸாரும் 45 கிலோக்கிராம் கஞ்சாவினை கைப்பற்றியிருந்தனர். இச் சம்பவத்திலும் ஒருவர் கைதாகியிருந்தார். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

போதைப் பொருள் தடுப்பில் பொலிஸார் வெற்றி கண்டுள்ளார்கள். பொது மக்களுடைய தகவல்களை வைத்தே இவ்வாறான கைதுகளும், போதைப் பொருள் மீட்புகளும் இடம்பெறுகின்றன.

மேலதிக தகவல்களையும் பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்க வேண்டும். குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் ஒரு போதும் பிண்ணிக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment