காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்பதவிக் காலம் இன்றுடன் நிறைவுக்கு வரும்நிலையில், தமது பணிகளைஇறுதிப்படுத்துவதற்காக குறுகில கால அவகாசத்தை வழங்குமாறு மேற்படி குழுஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
இதற்கான ஜனாதிபதி செயலகத்தின் முடிவு இன்றைய தினமே தமக்குக் கிடைக்கும் எனஎதிர்பார்க்கிறார் என்று ஆணைக்குழுவின் தலைவரான மெக்ஸ்வெல் பரணகமதெரிவித்தார்.
அலுவலகப் பணிகளை நிறைவு செய்வதற்காகவும், சுமார் 20 ஆயிரம் வரையிலான கோவைகளைஉரிய வகையில் ஆவணப்படுத்தி கையளிப்பதற்காகவுமே காலஅவகாசம் கோரினோம் என்றும் அவர் கூறினார்.
வடக்கு, கிழக்கில்காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக தமது ஆட்சியின்போதுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகமதலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை அமைத்தார்.
இது விடயத்தில் ஆலோசனைகளைப் பெறுவதற்காக டெஸ்மன்ட் டிசில்வா தலைமையில் வெளிநாட்டு ஆலோசனை குழுவொன்றையும் அமைத்தார்.
குறுகிய கால விசாரணையின் பின்னர் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விசாரணைஅறிக்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் - காணாமல்போனோர் குறித்தானவிசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.இதற்கென விசேட குழுக்களும் அமைக்கப்பட்டன்.
ஆட்சி மாற்றத்தின் பின்னரும்பணிகளைத் தொடர்வதற்கு பரணகம குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅனுமதித்திருந்தார். இரண்டு தடவைகள் பதவி நீடிப்பயைும் வழங்கியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல்போனோர் தொடர்பில் பரணகம குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள்கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சுமார் 4 ஆயிரம் இரட்டை முறைப்பாடுகளும்அடங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் பற்றி ஒருதரப்பு சாட்சியமேபதிவுசெய்யப்பட்டுள்ளது.
சுமார் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடப்பில் இருக்கின்றன.இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பரணகம குழுவின் பதவிக் காலம் இன்றுடன்நிறைவுக்கு வருகின்றது.
இந்தக் குழு கலைக்கப்பட்ட பின்னர், காணாமல்போனோர்விகாரத்தைக் கையாள்வதற்கு தனிப்பணியகமொன்று நிறுவப்படும். இற்கான சட்டமூலமும்நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பரணகம குழுவின் அறிக்கைகள் இந்தக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் இணை அனுசரணையுடன்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், காணாமல்போனோர் குறித்து தனிப்பணியகம் ஒன்றுஅமைக்கப்படவேண்டும் என்ற சிபாரிசும் உள்ளடங்கியுள்ளது.
No comments:
Post a Comment