அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையில், சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் கிராம மக்களின் சாட்சியப் பதிவுகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், அடுத்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 12 நாட்களாக நடைபெற்ற சாட்சி விசாரணையில், குமாரபுரம் சம்பவத்தில் காயமடைந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் மற்றும் அச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் என அக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதில் பலர் இராணுவத்தினரால் தமது உறவுகள் கண்முன் சுடப்பட்டதாக தெரிவித்ததோடு, எதிரிகள் சிலரையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
பொதுமக்களின் சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது பொலிஸ் மற்றும் பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள் சாட்சிகளாக அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியான கே.எஸ்.ரத்தினவேல் கூறியுள்ளதோடு, அடுத்த வாரமளவில் அனைத்து விசாரணைகளும் நிறைவடையுமென குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் குமாரபுரம் கிராமத்தில், கடந்த 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், 26 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, 39 பேர் காயமடைந்தனர்.
இந்த படுகொலை வழக்கில் தெஹியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக அடையாளம் காணப்பட்டு, மூதூர் பொலிஸாரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டு முதல் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
எனினும், தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி, எதிரிகள் இந்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பிரகாரம், தற்போது குறித்த விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
சுமார் 20 வருடங்களாக நடைபெற்று வரும் குறித்த வழக்கு விசாரணைகளில், எட்டு இராணுவ வீரர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் பிணையில் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அறுவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சாட்சி விசாரணைகளின் பிரகாரம் குறித்த அறுவருக்கும் எதிராக அதிகபட்ச தண்டனை விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment