இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான விசேட பாதுகாப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதன் பொருட்டு கடற்படையின் படகுகளை ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன கூறினார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் காரணமாக நாட்டினுள் தற்போது கஞ்சா போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment