சித்தரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச தினமான சித்திரவதையினால் பாதிக்கப்ட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் தினமான யூன் 26 ஆம் திகதியை
நினைவு கூரும் முகமாக நாளை வியாழக்கிழமை விழிப்புணர்வு பேரணி ஒன்றை யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்கழு முன்னெடுக்கவுள்ளது.
நினைவு கூரும் முகமாக நாளை வியாழக்கிழமை விழிப்புணர்வு பேரணி ஒன்றை யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்கழு முன்னெடுக்கவுள்ளது.
சித்தரவதையை இல்லாது ஒழிப்போம், சித்தரவதையை நிராகரிப்போம், என்ற வாசகங்களுடன் குறித்த பேரணி நாளை யாழ்ப்பாண மனித உரிமையை ஆணைக்குழு யாழ்.பிராந்திய அலுவலகத்திலிருந்து ஆரம்பித்து யாழ் பொதுநூலக முன்றலில் இடம்பெறவுள்ளதாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி கனகராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சித்திரவதைக்கு எதிரானவர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தண்டனைக்கு எதிரான உரிமையை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கை, இழிவான நடத்துகை, போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த வருடம் மாத்திரம் யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை இணைத்துப்பார்க்கும்போது கிட்டத்தட்ட 250க்கு அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment