நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஊடாக மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான கனவை கண்டு வருவதாகவும் எனினும் அந்த கனவு நனவாக எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என பிரஜைகள் சக்தி அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நுலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முன்னிட்டு செயற்பட்ட சிவில் அமைப்புகள், மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தனர்.
கொள்ளையர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், எங்கே கொள்ளையர்கள் பிடிபட்டனரா என்று கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் சிவில் அமைப்புகளிடம் கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்ட நபர்களுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment