June 22, 2016

ஐ.நா மனித சபையில் இலங்கைக்கு தலையிடி கொடுக்கும் பன்னாட்டு நிபுணர் குழு யார்?

ஐ.நா மனித உரிமைச்சபையில் இலங்கைக்கு தலையிடியாக மாறியுள்ள இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்களை குழுவின் சிறப்புக் கூட்டம் ஜெனீவா இடம்பெறுகின்றது.


இலங்கை தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் முக்கியத்துவம் உள்ளதாக ஜெனீவாவில் மாறியுள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதியில் இலங்கை உண்மையுடன் இருக்கிறதா? (Is Sri Lanka living up to its commitment to the UN Human Rights Council? ) என தலைப்பில் இன்று மதியம் 1மணிக்கு IV இலக்க அறையில் இக்கூட்டம் இடம்பெற இருக்கின்றது.

1. மதிப்புக்குரிய ஜெப்ரே ராபர்ட்சன் QC **(Geoffrey Robertson QC) : ஒரு தனித்துவமிக்க சர்வதேச நீதிபதியாகவும் விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும், முன்னணி பாடநூல்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

ஐரோப்பிய நீதி மன்றத்திலும், ஐ.நா. போர்க்குற்றங்கள் நீதிமன்றங்கள் மற்றும் பல பொதுவளமை நாடுகளின் உச்சநீதி மன்றங்களிலும் பல புகழ்பெற்ற வழக்குகளில் அவர் வாதாடியுள்ளார்.

2. மதிப்புக்குரிய ரிச்சர்டு ஜெ.ரோஜெர்ஸ் (RichardRogers) :* மோதலுக்குப் பிந்தைய கொசோவோவில் ழுளுஊநு யின் முதன்மை சட்ட அமைப்பின் கணகாணிப்பாளராகவும், ஐ.நா.வின் கம்போடியா நீதிமன்றங்களின் அசாதாரண விசாரணை மன்றங்களில் முதன்மை பிரதிவாதி வழக்கறிஞராகவும் இருந்துள்ளார்.

தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு பாதிக்கப்பட்ட பல குழுவினர்க்கு உதவிவருகிறார். மேலும் வங்காள தேசம், போஸ்னியா, ஹெர்ஜெகோவினா, குரோசியா, கொசோவோ, மற்றும் உகாண்டா ஆகியவற்றின் தேசிய போர்க் குற்றங்கள் நீதிமன்றங்களிலும் பணியாற்றி வருகிறார்.

3. மதிப்புக்குரிய ஹீதர் ரியான் (Heather Ryan) : * 1975-79 வரையிலான பெருந்திரள் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பான கெமர் ரூஜ் ஆட்சியின் மூத்த தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட கலப்புத் தீர்ப்பாயமான கம்போடியாவில் உள்ள நீதிமன்றகளின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான ஆலோசகராக இருக்கிறார்.

4. மதிப்புக்குரிய மேரி கிராடு (Marie Guiraud) தற்போது ஐ.நா.உதவி பெற்ற கம்போடிய நீதிமன்றங்களின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிமைக் கட்சி முன்னணி சக வழக்கறிஞராக, பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 4000 பேரின் நலன்களுக்காக வாதிட்டு வருகிறார்.

ஐவோரியா, காங்கோலிய நீதிமன்றங்களில் சர்வதேசக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேரி வாதாடியுள்ளார், மேலும் கம்போடிய நீதிமன்றங்களின் சிறப்பு விசாரணை மன்றங்களில் 002ஃ01 வழக்கில் குடிமைக் கட்சி வழக்கறிஞராக இருந்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரத்தில் சிறிலங்காவுக்கு நெருக்கடியாக மாறியுள்ள Monitoring Accountability Panel (MAP) என அழைக்கப்படும் இப்பன்னாட்டு நிபுணர் குழுவினை கடந்த செப்ரெம்பர் மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment