June 22, 2016

மன்னார், மடு பிரதேசத்தில் காடழிப்பு! இடம்பெயர்ந்த தமிழ் மக்களை பலவந்தமாக குடியமர்த்துவதாக குற்றச்சாட்டு!

மன்னார் மடு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பகுதி அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


மன்னார் மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களே இவ்வாறு குடியமர்த்தப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு 80 பேர்ச்சஸ் வீதம் 300 குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்படவுள்ளன.

மீளக்குடியமர்த்துவதற்காக தாம் வேறு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் பலவந்தமாக தம்மை குறித்த பிரதேசத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த மக்களுக்கு வழங்க வேறிடங்களில் காணி இல்லாத காரணத்தினால் அவர்களை இவ்விடத்தில் குடியமர்த்த நேர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரச அதிபர் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment