June 12, 2016

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு விரைவில் தீர்வு காணப்படும்- பிரதமர் ரணில்!

வடக்கு கிழக்கில் தொடர்ந்து நிலவிவரும் காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவினர், இது குறித்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், கிழக்கு மாகாணத்திலும் படையினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென, கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வட மாகாணத்தில் படையினர் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாரிய சவால்கள் காணப்பட்ட போதிலும், அவை சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டதைப் போன்று, கிழக்கிலும் விரைவில் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment