June 12, 2016

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பு!

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
உபாலி தென்னக்கோன் ரிவிர பத்திரிகையின் செய்தி ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.


இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலரே இந்த தாக்குதல்களை நடத்தியிருந்தனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு சில தினங்களின் பின்னர் 2012ம் ஆண்டு மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது உபாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


லசந்த கொலையாளிகளுக்கும் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையில்  தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment