June 12, 2016

ரெலோ, ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி உட்­பட 12 கட்­சி­க­ளுடன் ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ், இலங்கை தொழி­லா ளர் காங்­கிரஸ், ஸ்ரீ ரெலோ, தேசிய காங்­கி ரஸ் உட்­பட
12 கட்­சி­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்ளார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப் பின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன தலை­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை மறு­சீ­ர­மைப்­பது குறித்து விரி­வாகக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. அதன் பிர­காரம் அனைத்து சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் அங்கம்

வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சிகள் மற்றும் புதி­தாக இணை­ய­வுள்ள கட்­சிகள் ஆகி­ய­வற்­றுடன் புதிய புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­தி­டு­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் ஐக்­கிய மக்கள் கூட்­ட­மைப்பில் அங்கம் வகித்துக் கொண்­டி­ருக்கும் பெரும்­பான்மை இனக் கட்­சி­க­ளு­டனும் தொடர்ந்து பேச்­சு­வார்த்தை மேற்­கொண்டு கூட்­ட­மைப்பை விரி­வாக்­கு­வது தொடர்­பா­கவும் கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதன் தொடர்ச்­சி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­தி­யோக பூர்வ இல்­லத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையைக் கைச்­சாத்­திடும் நிகழ்வு நேற்று சனிக்­கி­ழமை காலை இடம்­பெற்­றி­ருந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இந்­நி­கழ்வில் அமைச்­சர்­க­ளான மஹிந்த அம­ர­வீர, பைஸர் முஸ்­தபா ஆகி­யோரும் ஈழ மக்கள் ஜன­நா­யகக் கட்சி செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவாந்தா, ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் ஸ்தாபகத் தலைவர் பிர­பா­க­ணேசன், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலை­வரும் நுவ­ரெ­லியா பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம், ஸ்ரீ ரெலோ தலைவர் உத­ய­ராசா, தேசிய காங்­கிரஸ் தலைவர் அதா­வுல்லா உட்­பட ஏனைய கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை வலு­வா­ன­தாக விரி­வாக்கும் நோக்­கிலும் அடுத்து நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலை இலக்கு வைத்தும் குறித்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தன.

ஜனா­தி­பதி கருத்து



இந்த நாட்டில் கடந்த காலங்­களில் கூட்­டுக்­களால் தான் ஆட்சி அமைக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஆட்சி அகற்­றப்­பட்­டி­ருப்­ப­தையும் கண்­டி­ருக்­கின்றோம். எவ்­வா­றா­யினும் தனிக்­கட்­சி­யொன்­றினால் ஆட்­சி­ய­மைப்­பது என்­பது தற்­போ­தைய நிலையில் முடி­யாத காரி­ய­மாகும். ஆகவே சிறு­பான்மை பெரும்­பான்மை என்ற பேத­மில்­லாது நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை இலக்­கு­களை எட்­டு­வ­தற்­காக மறு­சீ­ர­மைக்க வேண்டும். பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் புதிய புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளன. அதன் ஒரு அங்­க­மா­கவே தற்­போது உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளன.

எதிர்­கா­லத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைக்கும் பேச்­சுக்கள் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளன.

ஒரு குடும்­பத்தில் பல பிள்­ளைகள் காணப்­ப­டு­வது இயல்­பா­னது. ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு குணத்தைக் கொண்­டி­ருக்­கலாம். ஆனால் அவர்கள் அனை­வரும் கேட்­ட­வற்றை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது. அதற்­காக அவர்­களை புறக்­க­ணிக்­கவும் முடி­யாது. அனை­வரும் ஒன்­றி­ணைத்து ஒற்­று­மை­யான பலம் மிக்க கட்­ட­மைப்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பை எதிர்­கா­லத்தில் உரு­வாக்­கு­வதே எமது இலக்­காகும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்ட கட்­சிப்­பி­ர­தி­நி­திகள் மத்­தியில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, இந்­நி­கழ்­வின்­போது அடுத்த வரு­டத்தின் பெப்­ப­ர­வரி மாதத்தில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டல்கள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் பெரும்பாலும் 70சதவீதம் வட்டார முறையிலும் 30சதவீதம் விகிதாசர முறையிலும் நடத்துவதையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விரும்புவதாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்தனவின் மாஜன கட்சி, விமல்வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, உதயகம்மன்விலவின் பிவித்துரு ஹெல உறுமய உட்பட கம்னியூஸ்ட் கட்சிகள் எவையும் குறித்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment