அரசாங்கத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான தொடர்பு அம்பலமாகியுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பில் மஹிந்த ராஜபக்ஸ வாக்களிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான விசாரணைகள் நத்தை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவுடன் அரசாங்கம் சில டீல்களை கொண்டுள்ளதே விசாரணைகள் மந்த கதியில் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரவி கருணாநாயக்க தோற்கடித்தாலும் மக்களின் எதிர்ப்பு அலைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment