June 29, 2016

ஆண் பாலியல் தொழிலாளிகளினால் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம்!

ஆண் பாலியல் தொழிலாளிகளினால் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் நாட்டில் அதிகரித்துள்ளது.


இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களாக மாற்றமடைந்த ஆண்களின் (ட்ரான்ஸ்ஜென்டர்) எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

இவ்வாறான ஆண் பாலியல் தொழிலாளிகளின் சேவையை பெற்றுக்கொள்ளும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மத்தியில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று மற்றும் ஏனைய பால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் வெகுவாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெண் பாலியல் தொழிலாளிகளை விடவும் ஆண் பாலியல் தொழிலாளிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.திருமணம் முடிந்த மற்றும் திருமணம் முடிக்காத பலரும் இந்த பெண்களாக மாறிய ஆண் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர்.

உயர்குடிகளைச் சேர்ந்த செல்வந்த பெண்களும் இந்த ட்ரான்ஸ்ஜென்டர் அல்லது பெண்களாக மாறிய ஆண்களிடம் பாலியல் சேவை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

பெண்களாக மாற்றமடைந்த ஆண் பாலியல் தொழிலாளர்கள் பாதுகாப்பான பாலுறவு முறைகளை பின்பற்றத் தவறுதனால் அவர்களும் அவர்களிடம் சேவை பெற்றுக் கொள்ளும் நபர்களும் எச்.ஐ.வீ போன்ற தொற்றுக்களினால் பீடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment