June 29, 2016

தமிழன் என்றாலே இரண்டாம் தர பிரஜையாகவே பார்க்கப்படுகிறோம்!

நல்லாட்சி அரசிலும் இந்த நாட்டின் ஒரு பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கே தற்போதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நல்லாட்சி எனச் சொல்லப்படும் இந்த அரசிலும்  நாட்டின் ஒரு பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வதற்கே தற்போதும் எம் . ஓ. டீ. எனப்படும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மக்கள் தம்மை குறித்த தீவில் தங்கி நின்று தொழில்புரிய அனுமதிக்குமாறு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையினை கடற்படையினர் மறுத்துவரும் நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் பிரகாரம் அப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடத் தீர்மானிக்கப்பட்டது.
அத் தீர்மானத்திற்கமைய இரணைதீவிற்கு செல்வதற்கான அனுமதியை பூநகரிப் பிரதேச செயலாளர் ஊடாக கேட்டபோது மேற்படி தீவிற்கு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என மறுத்து விட்டனர். நான்ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் எனத்தெரிவித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தமிழன் என்றால் அது நாடாளுமன்ற உறுப்பினரானாலும் இரண்டாம் பிரஜையாகப் பார்க்கும் நிலையே இந்த அரசின் காலத்திலும் நிலவுகின்றது. இதன்காரனமாக மாவட்ட மக்களின் பிரச்சணைக்கு தீர்வு எட்ட முடியவில்லை. என்றார்.

No comments:

Post a Comment