June 29, 2016

மீள்குடியேற்றம் என்ற பெயரில்போலியான படத்தை வெளியுலக்கு அரசு-சுரேஸ்பிரேமச்சந்திரன் !

வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களை எதோவொரு வகையில் மாற்றுக்காணிகளை வழங்கி குடியேற்றிவிட்டு மக்கள் எல்லோரும் மீளக்குடியேறிவிட்டார்கள்
என்ற போலியான படத்தை வெளியுலக்கு காட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மக்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட அவர்களது சொந்த காணிகள் அவர்களிடமே திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் வலிவடக்கில் மேலும் ஒர் தொகுதி மக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு; விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் குறித்த குடியேற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேரடியாக சென்று பார்வையிட்டதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வலிவடக்கிலுள்ள காணி விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறும் போது இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய மொத்த காணிகளில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக விமான நிலையம் அமைப்பதற்கும் கடற்படையின் தேவைக்கும் சுவிகரிக்கவுள்ளதாக பேசியுள்ளார். இச் செயற்பாடனது மக்களது காணிகளை அபகரித்து இராணுவ தேவைகளுக்கு பயனபடுத்துவதாகவுள்ளது.
மேலும் இம் முறை விடுவிக்கப்பட்ட மேலும் ஒர் தொகுதி நிலப்பரப்பிலும் விடுவிப்பதாக கூறிய வீதிகள் முற்றாக விடுவிக்கவில்லை. குறிப்பாக அராலி வல்லை வீதி அதேபோன்று மல்லாகம் கட்டுவன் வீதி முழுமையாக திறக்கப்படாது மக்களுடைய காணிகளை ஊடறுத்து வீதிகளை திறந்துவிட்டுள்ளார்கள். இதனூடாக மக்களது காணிகள் அவர்களுக்கு கிடைக்காமல் போகக்கூடிய நிலமையும் காணப்படுகின்றது.
மேலும் அரசாங்கமானது வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களை எதோரு வகையில் மாற்றுக்காணிகளை வழங்கி குடியேற்றிவிட்டு மக்கள் எல்லோரும் மீளக்குடியேறிவிட்டார்கள் என்ற போலியான படத்தை வெளியுலக்கு காட்டுவதற்கு முயற்சிக்கின்றதே தவிர மக்களது காணிகளை முழுமையாக மக்களிடமே திருப்பி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
குறிப்பாக தற்போது விமான நிலையம் அமைப்பதற்கு கடற்படை முகாம் அமைப்பதற்கு என காணிகளை சுவிகரிப்பதற்கு படைத்தரப்பு முயற்சிக்கின்றது. உண்மையில் இதற்கான காணிகள் முன்னரே அதாவது 1972 ஆண்டே சுவிகரித்தாயிவிட்டது. இனிமேலும் காணி சுவிகரிப்பு தேவையற்றது. அவ்வாறு பாரிய விமான நிலையம் அமைப்பதானால் காணிகள் உள்ள முழங்காவில் பூநகரி போன்ற இடங்களுக்கு செல்லாம் என முன்னரே கூறப்பட்டது.
மேலும் வலிவடக்கில் உள்ள மேலதிகமான இராணுவத்தை வெளியேற்றுவதனூடாக மக்களது காணிகளை அவர்களிடமே மீளக்கையளிக்க முடியும். எனவே சொந்த நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு அவர்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட அம் மக்களது நிலங்களது அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் ஒர் சில குடியேற்றங்களை செய்துவிட்டு முழுமையான மீளக்குடியேற்றம் இடம்பெற்றதாக காட்ட முடியாது.
அத்துடன் இக் காணிப்பிரச்சனையானது வலிவடக்கில் மட்டும் உள்ள பிரச்சனையல்ல அது யாழ்ப்பாணத்தின் எனைய பிரதேசங்களிலும் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு போன்ற சகல இடங்களிலும் உள்ளது. எனவே இங்கெல்லாம் மக்களிடம் இருந்து சுவிகரிக்கப்பட காணஅகள் மக்களுக்கே திருப்பி கொடுக்கப்பட வேண்டியதுடன் வீதிகளும் முழுமையாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட வேணடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment