ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒன்றரை வருடங்களாகி விட்டபோதும்
இன்னும் முகாம்களில் வசிக்கும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறுவதை எதிர்ப்பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவை தளமாகக்கொண்ட கொள்கை சிந்தனைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
ஓக்லேன்ட் நிறுவகத்தில் வெளியிடப்பட்ட 16 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றில், 2015ஆம் ஆண்டு நவம்பர் வரையில் 11 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த 38ஆயிரத்து 500 பேர் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வந்தனர்.
இவர்களில் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், மீள்குடியேற்றத்தை கையாளும் விதம், பிழையானது என்று கூறியுள்ள கலிபோர்னியா அமைப்பு, உறுதியளித்தப்படி எத்தனை காணிகள் மீளவழங்கப்பட்டன.
எத்தனை பேர் மீள்குடியேற்றப்பட்டார்கள் என்ற விடயங்களை அறிந்துக்கொள்ள முடியாதுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சம்பூரில் கடற்படையினர் தாம் பிடித்துவைத்திருந்த காணிகளை விடுவித்தபோதும் இராணுவத்தினர் அங்கு புதிய முகாமை அமைந்துள்ளனர் என்பதை நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது ஏற்கனவே பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ள மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அடிப்படை வசதிகள் கட்டியெழுப்பப்படாத நிலையில் மீள்குடியேற்றம் சவால்களுக்கு உட்பட்டுள்ளது.
அங்குள்ள நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு தயார்செய்யப்படவில்லை. போரின் போது இடம்பெற்ற எறிகனை வீச்சுக்களால் காணிகளை விட்டு வெளியேறி சென்றவர்களின் காணிகளது உரித்துக்களில் தெளிவான தன்மை இல்லை.
எனவே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய நடைமுறை அதிர்ச்சியை தருகிறது என்று கலிபோர்னியாவை தளமாகக்கொண்ட கொள்கை சிந்தனைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே போர்க்குற்றம் தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்தவர்களுக்கு மீண்டும் உரித்துடன் காணிகள் திருப்பித்தரப்படுவதற்கு அமைப்புக்களும், தலைவர்களும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும் என்றும் கலிபோர்னியா நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment