June 1, 2016

40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்படவில்லை! அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள விடயத்தினை வெற்றிகொள்ள முடியும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மற்றும் ஏனைய விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக சர்வதேச நாடுகளின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்பட்டுள்ள பிரச்சினையினை வெற்றிகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டினை தாம் நிராகரிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஐ. நா. செயலாளர் நாயகத்திடம் உள்ளக விசாரணையொன்றுக்கு உறுதியளித்தார்.

எனினும் அதற்கு தற்போது நாம் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆட்சி காலம் போலன்றி தற்போது நாட்டின் நிலை மாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment