June 23, 2016

மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா நாளை (23) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

 கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 1 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 6 மணிக்கு தமிழிலும், காலை 6.45 மணிக்கு சிங்கள மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

மாலை 6.15க்கு செபமாலை மற்றும் நற்கருணை வழிபாடுகளும் இடம்பெறும்.
எதிர்வரும் 1 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வேஸ்பர் ஆராதனை வழிபாடுகளுடன் நற்கருணை திருபவனியும் இடம் பெறும்.
திருவிழாத் திருப்பலியானது 2 ஆம் திகதி  சனிக்கிழமை   காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை,யாழ் மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுப்பார்கள்.

-மடு திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான  பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல வித ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment