June 13, 2016

ஐ.நா மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.


நல்லாட்சி எனக்கூறப்படும் ஸ்ரீலங்காவின் தேசியஅரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா விவகாரம் தொடர்பில் இடம்பெறும் இரண்டாவது கூட்டத்தொடர் மனித உரிமைகள் பேரவையில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துலக நாடுகள் மத்தியில் தமது நிலைப்பாட்டையும் ஸ்ரீலங்காவின் நிலவரம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் ஸ்ரீலங்கா அரசும், பிரதான எதிர்கட்சியான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்காவின் சிவில் அமைப்புக்களும், புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புக்களும் தயாராகி வருவதுடன் ஜெனிவா செல்வதற்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஸ்ரீலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தேசிய அரசின் நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசால் சர்வதேச பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment