இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி ஆசிரியருமான பொ.உதயரூபன் தாக்கப்பட்டமையைக் கண்டி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு – மகாஜனக் கல்லூரி முன்பாக இடம்பெற்றது.
மகாஜனக் கல்லூரியில் கற்பித்தலில் ஈடுபட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும் ஆசிரியரைத் தாக்கியவரை விரைவில் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்குந் சென்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.ஹெட்டியாராச்சி, குறித்த நபர் வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment