May 25, 2016

விமல் வீரவன்ஸவை விசாரணைக்கு அழைக்கும் கடிதத்தை கையளிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த அதிகாரி!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ
இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தன்னை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் அறிவிக்கும் கடிதம் ஒன்றை வழங்க நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

மெண்டிஸ் என்ற ஆணைக்குழுவின் அதிகாரியே இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதாகவும் இது குறித்து நாடாளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து விடயத்தை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, சபை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சபை முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை விசாரணைக்கு அழைக்க நாடாளுமன்றத்திற்கு வர முடியாது எனவும் அவரது வீட்டுக்கு சென்றே இந்த கடிதத்தை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment