May 25, 2016

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜேர்மனி ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோ வழங்கவுள்ளதாக ஜேர்மனிய அரசாங்கம் அறிவித்துள்ளது.


வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவு காரணமாக குறுகிய உதவிகளை ஸ்ரீலங்காவிற்கு வழங்காது  அதன் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஊடாகவும் உதவி அமைப்புக்கள் மூலமாகவும் நிதியுதவி வழங்கப்படும் என ஜேர்மனிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment