May 28, 2016

ஜூன் மாதம் வெளிவருகின்றது சிறிலங்காவை மையப்படுத்திய மற்றுமொரு அறிக்கை !!

சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் பொறுப்புடமைக்கான பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை
(Sri lanka – Monitoring Accountability Panel (MAP) , ஜூன் மாத ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடரின் போது வெளிவர இருக்கின்றது.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைக்கு அமைய ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு முன்னராக இவர்களது அறிக்கை வெளிவர இருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினை சிறிலங்கா ஏற்றுக் கொண்டிருந்ததோடு, ஆதரவு பல வாக்குறுதிகளை அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா வழங்கியிருந்தது.

இத்தீர்மானம் வழங்கியுள்ள 18 மாத காலத்தில், சிறிலங்காவின் நடப்பாடுகளை கண்காணித்து, அனைத்துலக சமூகத்திடம் வெளிப்படுத்தும் பணியினை மேற்கொள்ளும் இந்த பன்னாட்டு நிபுணர் குழு, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து அவர்களது நீதிகோரலின் நியாயப்பாடுகளை வலியுறுத்தி வருகின்றது.

கடந்த மார்ச் மாத ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் போது உப மாநாடு ஒன்றினை ஜெனீவாவில் நடாத்தியிருந்த இந்த நிபுணர் குழு(Sri lanka – Monitoring Accountability Panel (MAP) , வரும் ஜூன் மாத கூட்டத் தொடரின் போதும் மற்றுமொரு உப மாநாட்டினை நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுயாதீனமாக இயங்கும் இந்த பன்னாட்டு நிபுணர் குழுவினை நியமித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தங்கு தடையின்றி இக்குழு தனது செயற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய நிதியினை பொதுமக்களிடம் கோரி நிற்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.














No comments:

Post a Comment