May 22, 2016

ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி! திருப்பதி கோயிலுக்கு சென்ற நடிகை நமீதா!

முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றதற்காக நடிகை நமிதா, திருப்பதி கோயிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றினார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை நமிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் வெற்றி பெற்று  ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தான் பிரார்த்தனை செய்திருந்ததாகக் கூறினார். 
தனது பிரார்த்தனை நிறைவேறியதை அடுத்து, ஏழுமலையானுக்கு தனது வேண்டுதலை நிறைவேற்றியதாக நமீதா குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்னர், நடிகை நமிதா முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment