September 5, 2015

ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய ஒன்றியம் வந்தடைந்தது luxembourg நாட்டை நோக்கி செல்கின்றது.(படங்கள் இணைப்பு)

ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் – ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி வந்தடைந்தது luxembourg நாட்டை நோக்கி செல்கின்றது.

ஏறத்தாள ஏழு தசாப்தங்களாகத் தமிழீழ மக்கள் மீது சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டிப் புலம்பெயர் தேசங்களில் அறப்போர் தொடுத்து புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் முதற்கட்டமாக 31.08.2015 திங்கட்கிழமை மதியம் 12:00 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டி மிதிவண்டிப் பயணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இவ் உரிமை பயணத்தை மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்து நெதர்லாந்து நாட்டை கடந்து இன்று ( 04-09-1993 ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி வந்தடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு ஒரு கவனயீர்புபோராடம் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம் ஏற்படில் தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈருருளிப் மனிதநேய செயற்பாட்டாளர்களும் வந்தடைந்தனர்.
அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தோடு முக்கிய அரசியல் சந்திப்புகள் நடைபெற்று எமது கோரிக்கைகளை முன் வைத்து சந்திப்புகள் இடம்பெற்றன.
கோரிக்கைகள் :
1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனை தொடர்ந்து மனிதநேய ஈருருளிப் பயணம் இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டிப் Luxembourg நாட்டை நோக்கி செல்கின்றது.
DSC_0009DSC_0014DSC_0040DSC_0047DSC_0114DSC_0116DSC_0132DSC_0171

No comments:

Post a Comment