இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பில் மூன்று அமைச்சர்கள் தமிழில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர்
கடந்த 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பின்னர் புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி ஏற்பு நேற்று 04 ம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உறுதிப்பிரமாணத்தின் போது மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் ஆகிய மூவரும் தமிழ் மொழியில் உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்
இதேவேளை பதவிப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ஜனாதிபதிக்கு முன்பாக சென்ற உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிப்பிரமாண கையேட்டிலிருந்தவற்றை அவசர அவசரமாக வாசித்தனர். எனினும், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஏனைய உறுப்பினர்களை விட சில நிமிடங்கள் எடுத்து நிதானமாக தெளிவாக வாசித்துள்ளார்.







No comments:
Post a Comment