September 5, 2015

கையேழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.!(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யுத்தக் குற்றம், தமிழ் இன அழிப்பு தொடர்பானக சர்வதேச விசாணையை வலியுறுத்தி இன்று
சனிக்கிழமை இரண்டாவது நாளாக கையேழுத்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியினை அண்மித்த பகுதிகளில் நடைபெற்ற இக் கையேழுத்துப் போராட்டத்தில் இன்றுவரை 5,000 கையேழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை யாழ்.மத்தி பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக் கையேழுத்து போராட்டம் இன்று காலை திருநெல்வேலி, யாழ்.நகர், நல்லூர், யாழ்.பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றிருந்தது.
சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதற்காக பொது மக்கள் பலர் போராட்டத்தில் தாமாக கலந்து கொண்டு கையெழுத்துககளை பதிவு செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.










No comments:

Post a Comment