இளம் சமூகத்தினர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் யாழ்ப்பாண்தில் சடுதியாக அதிகரித்துள்ளது, இளம் சமூகத்தினர் பல்வேறு விதமான மனஅழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாகவே
இவ்வாறான தற்கொலை அதிகரித்து வருகின்றது என்று யாழ்.போதனா வைத்தியசாலை உளவள வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி எஸ்.சிவயோகன் தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில்நேற்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேற்படி விடயம் தொடர்பாக அவர்; மேலும் தெரிவிக்கையில்:-அண்மைக்காலமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களில் இளம் சமூகத்தினருடைய தொகையும் கணிசமாக உள்ளது.
இவ்வாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் இளம் சமூகத்தினர் தற்கொலைக்கு முயட்சித்து சிகிச்சை பெறுபவர்களாகவே உள்ளனர்.கடந்த காலங்களில் ஏற்பட்ட சகப்பான அனுபவங்களள் இளம் சமூகத்தினரை விரக்தியடைய வைத்துக்கதுடன், தற்போதைய கலாசாரத்திற்க ஏற்றவாறு காதல், பரீட்சை தோல்வீ உட்பட பல்வேறு காரணங்களுக்கான இவர்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள்.இவ்வாறு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு பிரச்சினைகளை தீர்க்கும் சிகிச்சை நிலையங்கள் (கவுண்சிலிங்) 8 அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வருபவர்களின் எண்ணிக்கையானது அண்மைக்காலமாக அதிகரிக்கின்றதை அவதானிக்க முடிகின்றது என்றும் அவர்; மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment