சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியா கருத்து எதையும் வெளியிடாது என்று கூறப்படுகிறது.
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த அறிக்கையை, இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ள புதுடெல்லி அதிகார வட்டாரங்கள், எனினும், இதுபற்றிய கருத்துகள் எதையும் இந்தியா வெளியிட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளன.
இந்த அறிக்கைக்கு மேலாக, இந்திய அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் கொண்டு வரவுள்ள தீர்மான வரைவின் உள்ளடக்கத்துக்காகவே காத்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 24ஆம் நாளுக்குப் பின்னர் இந்த தீர்மான வரைவு உறுப்பு நாடுகளிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
No comments:
Post a Comment