அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் போனார் தொடர்பில் பதிலளிக்குமாறு கோரியும் நாளை (10)வியாழக்கிழமை நண்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச சிறைக்கைதிகளின் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரைக் கண்டறியும் குழு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு மற்றும் கைதிகளின் உரிமைக்கான அமைப்பு ஆகியன இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இதில் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை பங்கு கொள்ளுமாறு ஏற்பாட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை அரசியல் கைதிகள் தவிர்ந்த ஏனைய கைதிகளுக்குள்ள சலுகைகளை உரிய நேரத்தில் வளங்குமாறு வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதால் அக்கைதிகளின் உறவினர்களையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் அழைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment