அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிநி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிநி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டு ள்ளனர். இவர்களை நியமிப்பதற்கான பரிந்துரைகள்
வழங்கப்பட்ட நிலையில் அரசாங்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
19 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான அரசியலமைப்பு சபைக்கு தற்போது உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.10 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவையில் 10 பேருடைய நியமனமும் இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோரும் இந்த பேரவையில் அங்கத்துவம் பெறுவர்.
விரைவில் இவ் அரசியல் அமைப்பு பேரவை செய்றபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட ராதிகா குமாரசுவாமி, ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவி வகித்தவர். பெண்கள் உரிமைகள் தொடர்பான விடயத்தில் பல ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment