கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் கணக்குக் குறித்து தாமாக கூறினால் அவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை எப்படியும் இந்தியாவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று, பல முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இதற்காக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி சிறப்புக் குழுவையும் மத்திய அரசு நியமித்து உள்ளது. அக்குழு புதுப்புது பரிந்துரைகளை அளித்துள்ளது.அதன் படி வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் தாங்களாக முன்வந்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் குறித்து அரசிடம் தெரிவித்தால், அந்த ரகசியம் பாதுகாக்கப்படும், அவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதிக வருமான வரி செலுத்துபவர்களின் ரகசியங்கள் அப்படித்தான் பாதுக்காக்கப்படுகின்றன என்றும் மத்திய அரசு உதாரணம் காண்பித்துள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment