September 4, 2015

மது ஒழிப்புத் தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு வைகோ கண்டனம்!

மதுவுக்கு எதிராகப் போராடிய தியாகி சசிபெருமாள் குடும்பத்தினர் கைதுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை தமிழக அரசு அமுல் படுத்தக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடையில் ஜூலை 31 ஆம் தேதி அறப்போர் நடத்தியபோது, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவர் சாகடிக்கப்பட்டார் என்று வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி சசிபெருமாள் குடும்பத்தினர் அவர்களின் கிராமத்துக்கு அருகே சித்தர்கோயிலில் காந்தி சிலை அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்., சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், அவரது தம்பி செல்வம், சசிபெருமாளின் புதல்வர்கள் விவேக், நவநீதன், செல்வத்தின் மகன் ராஜா ஆகிய ஐந்து பேரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது செயல் அடக்குமுறை நடவடிக்கையாகும். ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும் என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மேலும், காவல்துறையின் அராஜகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment