ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரனை நடத்தப்படுவதும், தனித் தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பை நடத்துவது அவசியமாகும் என்று நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற முன்னைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘தமிழினத் துரோகி’ கருணா தாய்த்தமிழகத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போது; ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது தமிழகம் கொதித்தெழுந்திருந்தால் நிச்சயம் இன அழிப்பை தடுத்திருக்க முடியும். தடுத்து நிறுத்தும் உயரத்தில் இருந்தது கருணாநிதி தலைமையிலான தி.மு.க.அரசு, போராடித்தடுக்கும் இடத்தில் அம்மையார் செயலலிதா இருந்தார். இவர்கள் இருவரும் எங்களைப் போன்றவர்களை போராடவிடாமல் தடுத்தார்கள். இதுதான் உண்மை. எங்களைப் போன்றவர்களை போராடவிடாது தடுத்த இந்த இரண்டு திராவிடக் கட்சிகலுமே இந்த விடையத்தில் துரோகம் இழைத்தது.
சிறிலங்கா எதிர்க்கட்சி தலைவராக த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அய்யா தெரிவாகியுள்ளது…
இனப்படுகொலை குறித்து தமிழக சட்டமன்றம், வடமாகாண சபை ஆகியவற்றில் முதல்வர்களாகிய அம்மையார் செயலலிதா, அய்யா விக்னேசுவரன் ஆகியோர் நிரைவேற்றிய தீர்மானம் குறித்து…
செனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடர் குறித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு…
ஊழலற்ற அரோக்கியமான தமிழகத்திற்கு அடிப்படைக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய தலைகீழ் மாற்றங்கள்…
அழிந்து மறைந்து போயிருக்கும் தமிழர் வாழ்வையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் மீட்டெடுக்க மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள்…
போன்ற பல்வேறு விடையங்களுக்கு தெளிவான துணிவான கருத்துக்களை நம்பிக்கையுடன் சொல்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்.


No comments:
Post a Comment