September 7, 2015

இறுதிப் போரில் 140,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான பன்னாட்டு விசாரணைக்கு அழைப்பு!

இறுதிப் போரில் 140,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான பன்னாட்டு விசாரணைக்கு டெனிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கொலாஜ் விலாம்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புக்களையடுத்துக் கருத்துரைத்த அவர், இலங்கையில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதும், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி வேண்டி அலைவதும் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் உள்ளடங்கலான பாரதூரமான கொடூரச் செயல்களை விசாரணை செய்வதற்குப் பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
.

No comments:

Post a Comment