September 6, 2015

ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரின் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளேன்;சிவஞானம் சிறிதரன்!

தமிழ் இன அழிப்பு, யுத்தக் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்ப வேண்டும்; என்பது தமிழ் மக்களின் முடிந்த முடிவு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
.
இம்முறையும் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத் தொடரின் பக்க அறையில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு மற்றும் போர்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் 4 ஆவது தடவையான ஜ.நாவில் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.
இது சர்வதேச தரத்திலான விசாரணையினை கோருவதாக இருக்குமா? அல்லது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் அறிக்கையாக அமையுமா என்ற சந்தேகம் இப்பொழுது எழுந்துள்ளது. அறிக்கை முழமையாக வெளிவந்த பின்னர்தான் அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
.
இதன் பின்னர்தான் அந்த அறிக்கையில் உள்ள நன்மை, தீமை தொடர்பாக நாங்கள் பேச முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்தவரையில் ஏற்கனவே தேர்தல் காலத்திலல் கூட நாங்கள் தமிழ் மக்கள் நம்பக் கூடிய சர்வதேச விசாரணை தேவை என்பதை தெளிவாக தெரிவித்து வந்தோம்.
தேர்தல்; முடிவடைந்த பின்னரும் இந்த விடையத்தில தெளிவாக உள்ளோம். மக்கள் எமக்குத் தந்த ஆணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் துரோகம் இழைக்காது.
இந்த யுத்தக் குற்றம் தமிழ் இனஅழிப்பு தொடர்பாக கண்ணால் கண்ட நேரடி சாட்சியாக நானும் உள்ளேன். இதனால் கடந்த 3 வருடங்களாக ஜ.நாவில் நடைபெற்ற அமர்வுகளுக்கு சென்று அங்குள்ள மனித நேய அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்துதமிழ் மக்கள் கொண்றொழிக்கப்பட்டது தொடர்பான பிரசார நடவக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.
வடக்கு கிழக்கில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவன் என்ற வகையிலும், கடந்;த் 3 வருடமாக அங்கு சென்று வந்தாலும் இம்முறையும் ஜெனீவா செல்லவுள்ளேன்.
ஆனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜ.நா செல்வது தொடர்பாக இதுவரை எந்;த முடிவும் எடுக்கவில்லை. எமது கட்சியில் வேறு யார் ஜெனீவா செல்லவுள்ளார்கள் என்றும் தெரியாது.
கட்சியினுடை அமைப்புகளுக்கு உட்பட்ட வகையில், கடந்;த காலங்களில் செயற்பட்டதைப் போன்று இம்முறையும் ஜ.நா கூட்டத் தொடரின் போது பக்க அறைகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிடவுள்ளேன்.
அமெரிக்கா எங்களை ஏமாற்றாது, சர்வதேசம் எங்கi கைவிடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்;ளது. சர்வதேச விசாரணை என்ற பிரேரணையை பல நாடுகள் ஜ.நாவில் நிறைவேற்றுவதற்கு முயட்சித்து தோற்றுப்போயிருந்தது. ஆனாலும் அமெரிக்க வல்லரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதனால்; அந்த நாடுகளின் செயற்பாடுகளை மையமாக வைத்துக் கொண்டுதான் எங்களுடைய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கின்றது. தங்களுடைய நலன்சார் விடங்களை இதற்குள் புகுத்தினாலும் அதனை அனுசரித்து போக வேண்டிய தேவைவ எங்களுக்கு உள்ளது. இதற்கான அவர்கள் சொல்வதற்கெல்லாhம் நாம் தலையசைக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும்; தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment