வடபகுதியின் அபிவிருத்திகள் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு சாதகமான சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கும் அதேவேளை வடக்கின் அபிவிருத்திகள் குறிப்பாக மீள்குடியேற்றம், நலன்புரி, நலன்புரி நிலைய மக்களின் வாழ்வாதாரம் காணி அபகரிப்பு, உயர் பாதுகாப்பு வலயம் போன்ற பிரச்சினைகள் காணப்படும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் மாவட்ட செயலக அதிகாரிகள், வடமாகாண பிரதம செயலாளர், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment