சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுவர்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடியவாறு புதிய சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன். கொடதெனியவைச் சேர்ந்த சேயா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை நாட்டுக்கு ஏற்பட்ட கறையாகும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாதவாறு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டு ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால் சாட்சிகள் இல்லாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கை விடுத்த அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் பொறுமையுடனும் அமைதியுடனும் செயற்படுங்கள் எனவும் பிரதேசவாசிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment