வீடுகளில் துன்புறுதல், முறையற்ற குழந்தை பிரசவம், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றால் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கென
அனுமதிக்கப்படும் பெண்களிற்கு தேவையான அடிப்படை பொருட்களடங்கிய அவசர பொதிகளை வழங்க UNHCR நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு பொதியும் ரூபா 2000 பெறுமதியான பொருட்களென 75 பொதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் குறித்த நிறுவனத்தினால் அண்மையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் மேற்குறிப்பட்டவாறான உதவிகளற்ற நோயாளிகள் வைத்தியசாலையிலுள்ள பாலியல் சார்ந்த வன்முறைகள் தடுப்புக்குழுவினரால் இனங்கண்டு இப்பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment