யேர்மனியில் மற்றும் நியூசீலந்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு வலுப்பெற்று வருகின்றது .
யேர்மனியில் கடந்த வாரங்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவை வலுப்பெற வைக்கும் நோக்கத்தோடு நடைபெற்று வரும் மக்கள் கலந்துரையாடலின் வரிசையில் நேற்றைய தினம் Ibbenbüren மற்றும் Rheine நகரங்களில் சந்திப்புகள் நடைபெற்றது . இச் சந்திப்பில் தாயகத்தில் நிலவும் சமகால அரசியல் நிலைமையை எடுத்துரைத்ததோடு , தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை வென்றெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் ஆவார்கள் என சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியாளர் திரு கோபி அவர்கள் எடுத்துரைத்தார் .
அத்தோடு சென்ற வாரத்தில் நியூசீலந்து நாட்டிலும் தாயகத்தில் ஒரு மாற்று அரசியல் தலைமை ஏன் வேண்டும் என்ற ஊடக பார்வையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது . இச் சந்திப்பில் இணையவழி ஊடாக அரசியல் எழுத்தாளர் நிர்மானுசன் கலந்துகொண்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார் .
No comments:
Post a Comment