August 19, 2015

கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டவர்கள் புலிகள் அல்ல! இந்தியா!

இந்தியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கின்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கையர்களும் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கை அகதிகள் என்பதை இந்தியப் பாதுகாப்பு தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸ் செல்வதற்கான உதவிகளை கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான ஆவணங்களை பெற்றுச் செல்வதற்காக இவர்கள் கொல்கத்தா சென்றிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தாவில் புலிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்கு வங்க காவற்துறையினர் இவர்களை கைது செய்திருந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் நக்சலைட் போராளிகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களின் உதவியுடன் தீவிரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக காவற்துறையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.
இதனையடுத்து மேற்குவங்க விசேட காவற்துறை படையினர் தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 6 இலங்கை அகதிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில் நக்சலைட் போராளிகளுக்கும் தமக்கு தொடர்பிருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கவில்லை என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட 6 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக காவற்துறையினரின் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment