புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் நாட்டை சீர்குலைத்தவர்கள் கணிசமான அளவு உள்ளனர். அதே நேரம் நாட்டின் வெற்றிக்காக உழைத்த பெருந்தொகையானோர் தோல்வியடைந்துள்ளனர்.
இதற்கு பிரதான காரணம் ஒரு சிலர் மேற்கொண்ட திட்டமிட்ட செயற்பாடுகளாகும் என கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹரையிலுள்ள அர்ஜுனா ரணதுங்கவின் அரசியல் அலுவலகத்தில் தமது வெற்றிக்கக் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூடத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
ஆகஸ்ட் 17ம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை பாதுகாத்து கொள்வதற்காக மேலும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும்.
தெரிவு செய்யப்பட்டுள்ள சிலரின் சதி திட்டங்கள் காரணமாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது கடினமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நல்லாட்சி மற்றும் நேர்மை தன்மையை பாதுகாக்க பொதுமக்கள் தொடர்ந்தும் ஈடுபட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
“ஜனவரி 8ல் பெற்ற வெற்றியை முன்னோக்கி கொண்டு செல்லவே எமக்கு ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் தேவை ஏற்பட்டது.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு நாட்டை தூய தலைவர்கள் இருவருக்கு கையளிக்க எம்மால் முடிந்தது. இதற்கு நீங்கள் அர்பணிப்பு செய்துள்ளீர்கள்.
அனாலும் இந்த வெற்றிக்கு எதிராக உழைத்தவர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.
இனவாதத்தை பேசி, நாட்டை துண்டாட முயற்சிக்கும் அல்லது எவ்வாறாயினும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் அந்த குழுக்கள் பாராளுமன்றத்தில் உள்ளதை நாம் மறக்க கூடாது. இது தொடர்பான எச்சரிக்கையுடன் நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்” எனவும் அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment