யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களின் வருடாந்த திருவிழாக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும்
யாழிற்கு படையெடுத்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்றவற்றின் வருடாந்த திருவிழாக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்றும் வகையில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையினைத் தொடர்ந்து தெற்கிலுள்ளவர்களும் வடபகுதி நோக்கி படையெடுத்துள்ளமையினையும் அவதானிக்க முடிகின்றது.

No comments:
Post a Comment