August 30, 2015

கிளி­நொச்சி பொன்­னகர் மக்கள் நீரின்றி அவதி!

கிளி­நொச்சி கரைச்சி பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பொன்­னகர் கிரா­மத்தின் முதலாம் கட்­டைப்­ப­குதி மக்கள் நீரின்றி பெரும் நெருக்­க­டியில்
வாழ்ந்து வரு­கின்­றனர். சுமார் 260 குடும்­பங்கள் வாழ்­கின்ற குறித்த பிர­தேசத்.தில் நூற்­றுக்கு மேற்­பட்ட குடும்­பங்கள் குடிப்­ப­தற்கு கூட நீரை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாளாந்தம் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.
மேற்­படி பிர­தே­சத்தில் உள்ள பொது கிணறு ஒன்றில் நீரை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சுற்று ஒழுங்கில் காத்­தி­ருந்து நீர் ஊற்­றெ­டுத்து நிரம்ப நிரம்ப பெற்­றுச்­செல்லும் அவல நிலையே காணப்­ப­டு­கி­றது. அதி­கா­லையில் கிணற்றில் ஊறி­யுள்ள நீரை குடிப்­ப­தற்கு மட்டும் மேற்­படி குடும்­பங்கள் பெற்­றுக்­கொள்­கின்­றன. பின்னர் ஏனைய தேவை­க­ளுக்­காக காத்­தி­ருந்து ஒவ்­வொரு குடும்­பமும் முப்­பது அல்­லது நாற்­பது லீற்றர் நீரை மட்­டுமே பெற்­றுக்­கொள்ளும் நிலை தொடர்ந்து வரு­கி­றது.
சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இதற்கு விரைவாக தீர்வைக் காண வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

No comments:

Post a Comment